மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தவர் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை கொடுத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் புதுதாமலைப்பட்டியை சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் கடந்த சனியன்று விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் திங்களன்று உயிரிழந்தார். இதன் பின்னர் அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே அரசு மருத்துவமனையில் உடலை பெற்ற அன்னலட்சுமியின் உறவினர்கள் அவரது முகத்தை பார்க்காமல் மயானத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மயானத்தில் இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது உறவினர்கள் முகத்தை பார்த்தனர். அப்போது தான் சடலம் மாறியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்னலட்சுமியின் உறவினர்கள் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்று சரியான உடலை பெற்று சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.