தீக்கதிர்

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்

இம்பால்,

மணிப்பூரில் இன்று 3.2 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று காலை 6.33 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.