வாஷிங்டன்;
அறுவடைத் திருநாளாகவும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் கருதப்படும் பொங்கல் திருநாளுக்கு அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் அங்கீகாரம் அளித்துள்ளது.
வெர்ஜீனியாவில் 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்கள் வசித்து வருகின்றனர். எனினும் பொங்கல் விழா, வெர்ஜீனியா மாகாணத்தால் அங்கீகரிக்கப்படாத விழா என்பதால் அதற்கு விடுமுறை அளிக்கப்படாமல் இருந்து வந்தது. தமிழக சிறுவர்கள் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கலன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்என்று வள்ளுவன் தமிழ் அகாதெமி என்ற அமைப்பு கடுமையாக போராடியது.
அதன் விளைவாக, கடந்த பிப்ரவரி 2017-இல் பொங்கல் பண்டிகையை அங்கீகரிக்க அந்த மாகாண சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. தற்போது அந்த தீர்மானம் சட்டமாகவும் மாறியுள்ளது.இதையடுத்து, 2018 பொங்கல் முதல் வெர்ஜீனியாவில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இது தமிழகத்தின் பண்பாட்டுக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம் என்று வெர்ஜீனியா மாகாண தமிழர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பொங்கலுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்மானத்தை வெர்ஜீனியா சட்டப்பேரவையில் ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உலகெங்கும் வாழும் தமிழக மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.