சென்னை,

தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கூடிய ஏராளமான பொதுமக்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது சென்னையில் இருசக்கரம், 4 சக்கர வாகனங்களில் சென்ற 150க்கும் மேற்பட்டோருக்கு விபத்துகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு ஒரே நாளில் சென்னையில் மட்டும் 176 இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. தவிர, தமிழகம் முழுதும் பல இடங்களில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட விபத்துகளில் 13 பேர் பலியாகினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே சோதனை சாவடி அருகே பட்டாசு வெடித்ததை கண்டித்த காவலர் ராஜேஷ் மீது தாக்குதல் நடத்திய 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கோவையில் நடந்த வாகன விபத்துகளில் 80 பேர் காயமடைந்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: