கொல்கத்தா;
மேற்கு வங்காள மாநிலம் மால்டாவின் குலாப்காஞ்ச் பகுதியில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்த இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுக்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் ஒருவர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து தற்போது 2 பேர் கள்ள நோட்டுக்களுடன் பிடிபட்டுள்ளனர். மோடி அரசு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் வடிவத்தில், அதிகளவிலான கள்ள நோட்டுகள், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.