தில்லி,

தில்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் இன்று காலை வெப்ப நிலை 8 டிகிரியாக இருந்தது. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதன் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள்  பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் 150 விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன. 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  பல இடங்களில் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. வட மாநிலங்களில் 56 ரயில்கள் தாமதம் அடைந்துள்ளன.15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: