சண்டிகர்,
அரியானாவில் திருமண விழா ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்தியதில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் உள்ள குல்ஹா நகரை சேர்ந்தவர் விக்ரம்ஜீத் சிங். இவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தார். வெளிநாடு வாழ் இந்தியரான விக்ரம் ஜித் சிங்கிற்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் திருமண வரேவற்பு நிகழ்ச்சி குல்ஹா நகரில் நடைபெற்றது. அப்போது மணமகனை சுற்றி வந்து உறவினர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நடன சுற்று முடியும் போதும் மணமகனின் உறவினர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு முறை வானத்தை நோக்கி சுட்டபோது திடீரென்று அவர் மீது ஒருவர் மோதினார். இதில்எதிர்பாராத விதமாக மணமகன் மீது குண்டு பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமைனக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.