நாமக்கல்: குடிபோதையில் ஆம்புலன்ஸ் ஓட்டி ஏற்பட்ட விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வளையக்காரனூர் என்ற பகுதியில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த தம்பதி கோவையை சேர்ந்த சண்முக சுந்தரம் மற்றும் அவரது மனைவி விஜயா என்பதும் விபத்து ஏற்படுத்திய தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: