தீக்கதிர்

கந்து வட்டிக் கொடுமையால் விஷமருந்தி ஒருவர் உயிரிழப்பு

அரியலூர்,
அரியலூர் அருகே கந்து வட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் பெரியமறை கிராமத்தில் விவசாயி மாணிக்கம் (80) தனது வயலிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கந்துவட்டி கொடுமையால் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கந்து வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பித் தராததால் நாச்சிமுத்து என்பவர் தமது நிலத்தை பறித்துக்கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.