ராமேஸ்வரம்,

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 1500-க்கு மேற்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 13 பேரை கைது செய்ததுடன், மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீனவர்கள் மீது கல், பாட்டில்கள்களை வீசி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.