சென்னை,

அரசியலுக்கு வருவது உறுதி என்றும் ஆன்மீக அரசியல் கொண்டு வருவதே எனது நோக்கம் என கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ராகவேந்திரா மண்டபத்தில் 6 ஆவது நாளாக இன்று ரசிகர்கள் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் , சந்திப்பின் கடைசி நாளான இன்றுதனது அரசியல் பிரவேசம்  குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். ரசிகர்கள் மத்தியில்  இன்று பேசிய ரஜினிகாந்த் ,

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம். பேருக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. நான் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு பல மடங்கு அதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அரசியல் மிகவும் கெட்டு விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப்போய் உள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தலைகுனிய வைத்து விட்டது.
அனைத்தையும் மாற்ற வேண்டும், அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, வெளிப்படையான, நேர்மையான, ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். விருப்பம். தமிழக மக்கள் அனைவரும் அதற்கு என் கூட இருக்க வேண்டும்.

உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும் என்றார்.

இந்த சந்திப்பின் போது ரசிகர்களுக்கு கிடா விருந்து அளிக்க விருப்பப்பட்டேன் ஆனால் இது ராகவேந்திரா மண்டபம் என்பதால், கிடா விருந்து அளிக்க முடியாதது வருத்தமளிக்கிறது என்று  ரஜினிகாந்த கூறியது குறிப்பிடத்தது. தமிழகத்தில்ன்மீக அரசியலை கொண்டு வருவதே எனது விருப்பம் என கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த்  அசைவ உணவு தடை விதிப்பாரோ?

Leave A Reply

%d bloggers like this: