திருப்பூர், டிச.31-
திருப்பூர் மாவட்டத்தில் வீடு, வீடாக மக்களைச் சந்தித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதி திரட்டுவது என்ற முடிவின்படி ஒரே நாளில் (ஞாயிற்றுக்கிழமை) மொத்தம் 140 குழுக்கள் மூலம் ரூ. 7.16 லட்சம் திரட்டப்பட்டது.

உழைக்கும் மக்கள் நலன் காக்கப்போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, புத்தாண்டு தொடங்கும் சமயத்தில் மக்களைச் சந்தித்து வளர்ச்சி நிதி திரட்டுவது என்ற முடிவின்படி 2018ஆம் ஆண்டுக்கான நிதி வசூல் இயக்கம் ஞாயிறன்று தொடங்கியது. திருப் பூர், வேலம்பாளையம், உடுமலை, அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம், குடிமங்கலம், மடத்துக்குளம், பொங்கலூர், காங்கயம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திட்டமிட்டபடி ஞாயிறன்று நிதி வசூல் இயக்கம் நடைபெற்றது. மொத்தம் 140 குழுக்கள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வசூல் இயக்கத்தில் பங்கேற்று வீடு, வீடாக நிதி திரட்டினர். காலையிலும், மாலையிலும் வசூல் இயக்கம் நடைபெற்றது.

வசூலுக்குச் சென்ற பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் இன்முகத்துடன் வரவேற்பளித்து, தங்களால் இயன்ற நிதியை வழங்கினர். இதில் வடக்கு மாநகரம் 1,04, 990,வடக்கு ஒன்றியம் 1,37,160, தெற்கு மாநகரம் 97,310, தெற்கு ஒன்றியம் 777,60, வேலம்பாளையம் 1,15,000, அவிநாசி 76,000, உடுமலை நகரம் 21,500, ஊத்துக்குளி 35,120, உடுமலை ஒன்றியம் 9000, குடிமங்கலம் 5000, மடத்துக்குளம் 20,100, பொங்கலூர் 4600, காங்கயம் 11,355 என மாவட்ட முழுவதும் மொத்தம் ரூ. 7,16,685 வசூலானது.  இந்த இயக்கத்தில் கட்சியின்மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், கே. உண்ணிகிருஷ்ணன், சி.மூர்த்தி, சி.சுப்பிரமணி, கே.ரங்கராஜ், எஸ்.ஆர்.மதுசூதணன், ஜி.சாவித்திரி, ஆர். குமார், டி.ஜெயபால் மற்றும் இடைக்குழுச் செயலாளர்கள் கே.பழனிசாமி, பி.முருகேசன், வி.பி சுப்பிரமணியம், ஆர்.சசிகலா, திருவேங்கடசாமி, கி.கனகராஜ், ஆர்.பரமசிவம், சிவசாமி, பன்னீர் செல்வம், சிவசாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் தலைமை ஏற்று பல்வேறு பகுதிகளில் நிதி வசூலில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: