கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் ஆட்டோமோட்டிவ் கோச்சஸ் அண்டு காம்போனென்ட்ஸ் நிறுவனம் (ஏசிசிஎல்)அமைந்துள்ளது. இதில் 176 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளில் வெறும் 5 ஒப்பந்தங்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தற்போது போட வேண்டிய ஒப்பந்தம் போடாமல் மூன்றரை ஆண்டுகளாக நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது.

இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப காலதாமதம் செய்யாமல் விரைவில் புதிய ஒப்பந்தம் போட நிர்வாகம் முன்வர வேண்டும், பணிகளை சீராக வழங்க வேண்டும், 2014 – 15 க்கான போனஸ் வழங்க வேண்டும், முதலுதவி அறைக்கு ஆட்களை நியமித்து போதிய மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும், கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும், குசேலர் தலைமையிலான சங்கம் பொறுப்பிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாததையும் கண்டித்து சிஐடியு சார்பில் டிச.28 அன்று (வியாழன்) தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு இன்ஜினியரிங் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.அர்ஜூணன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்டத் துணைத் தலைவர் என்.நித்தியானந்தம்,சிஐடியு நிர்வாகிகள் வி.ஜோசப், எஸ். கதிர்வேல், யு.உமாகாந்தன், வி.ஜி.மணி, எண்ணூர் சி.தவமணி, ஜி.சூரியபிகாஷ் உட்பட பலர் பேசினர். கிளைச் செயலாளர் எஸ். சங்கிலி ஆண்டவர் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

%d bloggers like this: