குழித்துறை;
‘ஏடாகூடம்’ எனும் சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்துவது உண்டு.
சிக்கலில் மாட்டுவதை ஏடாகூடத்தில் பட்டதாக கூறுவோம். உண்மையில் ஏடாகூடம் என்பது ஒரு புதிர் விளையாட்டுப் பொருள். “ரூபிக்ஸ் கியூப்” போன்று மரக்கட்டைகளால் செய்யப் பட்ட விளையாட்டுக் கருவி.பல ஆண்டுகளுக்கு முன் கேரளா விலும், திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் உள்ள மரத்தாலான வீடுகளில் அதிகம் காணப்பட்டன. மூன்று கட்டை,ஆறு கட்டை, பனிரண்டு கட்டை என பல வகையான ஏடாகூடங்கள் உள்ளன.இதில் ஆறு கட்டை ஏடாகூடம் மிக
அதிகம் காணப்பட்டன. இந்த ஆறு கட்டைகளையும் அதன் உரிய வெட்டு களில் வைத்து ஒன்று சேர்ப்பது மிக வும் கடினம். சேர்த்தவற்றை பிரிப்பதும் கடினம். அதன் ஆப்பை கண்டு
பிடித்தால் பிரிப்பது எளிது. எனவே தான் ஏடாகூடம் என பெயர். ஊரா குருக்கு (அவிழ்க்க முடியாத முடிச்சி) எனவும் கூறுவர். ஆங்கிலத்தில் Devil’s Knot. நிஜ ஏடாகூடம் நான்கு
அங்குலத்திற்குள், கைக்கு அடங்கும் விதத்தில் காணப்படும்.

குமரி மாவட்டம் களியக்காவிளை, மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர் ராஜசேகரன். 2008 ஆம் ஆண்டு மிகப் பெரிய ஓவிய பீடம் நிறுவி, அதில் இஎம்எஸ் நம்பூதிரிபாட்டின் ஓவியம் தீட்டி, கின்னஸ் உலக சாதனை படைத்தவர். திரைப்பட கலை இயக்குநரான இவர், 2007 ஆம் ஆண்டு கேரள அரசின் சிறந்த கலை இயக்குநருக் கான திரைப்பட விருது பெற்றவர். மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரி யில் கணிதம் பயின்ற இவர், புதிர் கணக்குகள் செய்வதில் ஆர்வ முடையவர். சிறு வயதில் ஏடா கூடத்தைப் பற்றி தெரிந்த இவர்,கின்னஸ் உலக சாதனை இணையதளத்தில் மிகப் பெரிய ஏடாகூடத்தை பார்த்ததும் அந்த கின்னஸ் சாதனை யை முறியடிக்க விரும்பினார்.

சென்ற ஏப்ரல் மாதம் அதற்காக விண்ணப்பித் தார். கின்னஸ் அதிகாரிகள் அந்த சாத
னையை முறியடிக்க ஒப்புதல் அளித்தனர்.அது 19 அடி நீளமும், 15 அங்குலம் வீதியும், 15 அங்குலம் உயரமும் உடைய ஆறு மரக்கட்டைகளால் செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின், வால்ச்சவாவில் (Valchava), Foffa Conradகளால் செய்யப்பட்டது.அதற்கான செலவினங்களுக்கு ஏராளமான நிறுவனங்களை அணு கினார். கடைசியாக இந்தியாவின் தொழிலதிபர்களில் ஒருவரான டாக்டர் ரவி பிள்ளை அதற்கான அனைத்து செலவுகளையும் செய்வதாக கூறி
னார். அதன்படி முந்தைய சாதனையை முறியடித்து 24 அடி நீளமும், 24 அங்குலம் வீதியும், 24 அங்குலம் உயரமும் உடைய பிரம்மாண்டமான ஏடாகூடம் உருவாக்கி அதை கேரளா வில் கொல்லம் றாவிஸ் றிசோர்ட்டில் (Raviz Resort) நிறுவியுள்ளார்.

புத்தாண்டில் ஜனவரி மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை திறந்து வைக்க உள்ளார். சுற்றுலா பயணிகளும், நாட்டு மக்களும் கூட்டம் கூட்டமாக சென்று இந்த கின்னஸ் உலக சாதனை ஏடாகூடத்தை பார்த்து வருகின்றனர்.

முதல் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தி பத்தாம் ஆண்டு முடியும் நிலையில், ஓவியர் ராஜசேகரன் இரண்டாவது கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்
தக்கது. கின்னஸ் உலக சாதனை படைத்தமைக்கு தமிழக அரசிடமிருந்து எதுவேனும் கிடைக்குமா என கேட்டு விண்ணப்பித்தபோது, கின்னஸ் உலக சாதனைக்கு ஒன்றும் கிடைக்காது என தமிழக அரசு பதில் அளித்ததாகவும், அரசிடம் உதவி கேட்டதை எண்ணி வெட்கப்படுவதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: