சென்னை, ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், தொழில்நுட்பவியலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 76

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எஸ்எஸ்எல்சி., கால்நடை அறிவியல், பொறியியல், எம்பிஏ, வேதியியல், உயிரி வேதியியல், ஐடிஐ ஆகிய துறையில் படித்திருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக இயக்குநர், TCMPF 29 & 30, அம்பத்தூர் தொழிற்சாலை எஸ்டேட், ஆவின் டையரி ரோடு, சென்னை – 600 098 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.01.2018.

மேலும் விவரங்களுக்கு சென்னை ஆவின் நிறுவன இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

http://www.aavinmilk.com/hrjmd2612173.html

http://www.aavinmilk.com/hrjmd2612174.html

Leave a Reply

You must be logged in to post a comment.