சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்றார்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த முன்னாள் முதல்வர், பிரேம்குமார் துாமல் தோல்வியடைந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சரை தொடர்ந்து 10 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜெய்ராம் தாக்கூர் சட்டசபைக்கு 5 ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2006 முதல் 2009 வரை பாஜக மாநில குழு தலைவராக பதவி வகித்த இவர்,  2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: