பனாஜி;
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவா மாநிலத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு சுமார் 30 சதவிகிதம் குறைந்திருப்பதாக அம்மாநில சுற்றுலா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவா மாநிலத்துக்கு, வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வருவார்கள். டிசம்பர் 25-ஆம் தேதி இரவில் தொடங்கும் கொண்டாட்டங்கள் புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 31 நள்ளிரவு வரை நீடிக்கும்.ஆனால் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 30 சதவிகிதம் சரிந்திருப்பதாக கோவா மாநில பயண மற்றும் சுற்றுலா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“கடந்த ஆண்டில் இங்கு வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை விட 30 சதவிகிதம் குறைவான அளவிலேயே இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வருகை புரிந்துள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக அதிகமான விமானக் கட்டணம் மற்றும் தங்குமிடங்களுக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” சுற்றுலா கூட்டமைப்பின் தலைவரான சவியோ மெஸியா கூறியுள்ளார்.எனினும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பயணிகள் வருகை குறைந்திருந்தாலும் புத்தாண்டை முன்னிட்டு அதிகமான பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.