ஈரோடு, டிச.26-
நம்பியூர் அருகே புதியதாக மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே அந்தியூர் – கோவை சாலையில் அமைந்துள்ளது மேட்டுக்கடை பகுதி. போக்குவரத்து நெரிசல் மிக்க இப்பகுதியில் அதிக அளவில் பெண்கள் வேலை செய்யும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. மேலும், கோவில்கள் மற்றும் குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் புதியதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் மதுக்கடை திறந்தால் குடி
யிருப்பு வாசிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, இப்பகுதியில் மதுக்கடை திறக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று மேட்டுக்கடை பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.