திருச்செங்கோடு, டிச. 26-
கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் திருச்செங்கோடு புதிய கிளை அமைக்கப்பட்டது.

சிஐடியு நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் திருச்செங்கோடு புதிய கிளை அமைப்புகூட்டம் திங்களன்று எம்.ஜி.இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச்செயலாளர் இ.செல்வம் துவக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் ஏ.ரங்கசாமி, மாநில இணை செயலாளர் ஏ.சண்முகம், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.இக்கூட்டத்தில், நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு கால நிதிப்பயனை நிறுத்தி வைக்காமல் உடனுக்குடன் வழங்க வேண்டும். மாநில பதிவாளரின் ஊதிய குழு பரிந்துரையை பரிசீலனை செய்து, பணியாளர்களின் ஊதிய உயர்வை 25 சதவீதமாக மாற்றியமைத்து சங்க பணியாளர்களுக்கு விரைவாக சம்பள நிலுவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்:
இதைத்தொடர்ந்து சங்கத்தின் செயல் தலைவராக எஸ்.தேவராஜன், பொதுசெயலாளராக எம்.ரங்கசாமி, செயலாளராக பி.ராமசாமி, பொருளாளராக டி.பொன்னுவேலு உள்ளிட்ட 7 பேர் கொண்ட நிர்வாககுழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மாநில பொதுசெயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.