சென்னை
அதிமுகவின் தலைவர்கள் ஆண்மையற்றவர்கள் என்று ஆர் எஸ்எஸ் பிரமுகர் மூர்த்தி விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு அதிமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினகரன் ஆர் கே நகர் தொகுதியில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார்.   இதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணியினர் தினகரன் ஆதரவாளர்கள் 6 பேரை அதிமுக வில் இருந்து நேற்று விலக்கி உள்ளனர்.
இது குறித்து ஆர்எஸ்எஸ் பிரமுகரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில். “பலவீனமான மனிதர்கள் ஆறுமாதம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.   ஆண்மையற்ற தலைவர்கள்.   ஆர் கே நகர் தோல்வியின் அதிர்ச்சியால் தினகரனின் ஆறு ஆதரவாளர்கள் மீது சவுக்கை சொடுக்கி உள்ளனர்”  என பதிந்துள்ளார்.
அவருடைய இந்த கடும் விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: