திருப்பூர், டிச.23 –
திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகரில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மாநகர போலீசார் காவிலிபாளையம், சந்திராபுரம், இடுவம்பாளையம், குப்பாண்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளியன்று திடீர் சோதனை நடத்தினர். இதில் மறைவான இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நால்வரை காவல் துறையினர் கைது செய்தனர். விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரகாஷ் (33), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் (25), இடுவம்பாளையத்தை சேர்ந்த  ரமேஷ் (25), அங்கேரி பாளையத்தை சேர்ந்த கணேசன் (34) என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 39 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.