சிம்லா,டிச.24-
இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக ஜெய்ராம் தாகூர் பதவியேற்கிறார். அவர் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மூத்த பாஜக தலைவர் பிரேம் குமார் துமால், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் அவரது சுஜான்பூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால், அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஷாந்தகுமார் மற்றும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரும் முன்மொழியப்பட்டனர்.

பின்னர், இந்த பட்டியலுக்கு வெளியே இருந்த மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜ் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தாகூர், மத்திய அமைச்சர் நட்டா இருவரும் முன்னணி யில் இருந்தனர். பல குழப்பங்கள், உள்குத்துக்களுக்கு இடையே, ஜெய்ராம் தாகூரை முதல்வராக்க, பாஜக மேலிடம் முடிவு செய்தது. இமாச்சலப் பிரதேசத்தில் மொத்த முள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. இதில், பாஜக 44 இடங்களில் வென்றது. ஆளும் காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியைப் பறிகொடுத்தது.

Leave A Reply

%d bloggers like this: