விருதுநகர்,
நாடு முழுக்க பட்டாசுக்கு தடை கோரப்பட்ட வழக்கில் ஜனவரி 5ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் இன்று முதல் மூடப்பட்டள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதல் காலவரம்பின்றி பட்டாசு ஆலைகள் மூடப்படுகிறது.  சில மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆலைகளை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தத்தை சங்கத் தலைவர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார். பட்டாசுக்கு சுற்றுசூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். பட்டாசு வழக்குகளை தாமதிக்காமல் விரைந்து முடிக்கவும் ஆலை உரிமையாளர்கள் கோரி உள்ளனர்.  நாடு முழுக்க பட்டாசுக்கு தடை கோரப்பட்ட வழக்கில் ஜனவரி 5ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.