கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பாகலூரில் உள்ள அரசு ஏற்படுத்திக்கொடுத்த கொடுத்த ராஜீவ்காந்தி தலித் குடியிருப்பில் எல்லப்பா மஞ்சுளா குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
2 பசு மாடுகள் 3 கன்றுகள் வைத்துள்ளனர். வீட்டுப் பக்கத்தில் தன் நிலத்தில் கொட்டகை போட்டு கால் நடைகளைக் கட்டி வைத்திருந்தனர், சம்பவத்தன்று இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது தீப்பிடித்து எரியும் கொட்டகைக்குள் கால்நடைகள் சிக்கி தீயில் கருகி காணப்பட்டன.தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மாடுகளை மீட்டு தீயை அணைத்தனர். இருபசுக்கள் தீயில் காதுகள், கண், தலை எரிந்து கருகின. சினைமாடு இறக்கும் நிலையில் உள்ளது. கன்றுகளும் பாதிப்புக் குள்ளாகின.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கிருஷ்ண தேவராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பிஜி மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், மாவட்டக் குழு நாராயணமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோதண்டராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் பாதிப்பு குறித்து விசாரித்தனர். பாகலூர் ராஜீவ் காந்தி தலித் குடியிருப்பு நிலம் 1996ல் அரசால் கையகப்படுத்தப்பட்டு 2003-ல் 147 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக் கள் வழங்கப்பட்டன.
ஆனால் இதுவரை வீதிகள், தெருவிளக்குகள், சாலை, கழிவுநீர் கால்வாய் கள், குடிநீர் வசதி வீடுகளுக்கு மின் இணைப்பு வசதிகள் எதுவும் இதுவரை செய்து கொடுக்கப்படாமல் தலித்குடியிருப்பு புறக்கணிக் கப்பட்டு வருகிறது. மேலும் 1996க்கு முந்தைய நில உடமையாளர் வீடுகள் கட்டக் கூடாது என மிரட்டி தகராறு செய்தும் வருகிறார். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழைய நில உடமையாளருக்கு ஆதரவாக வி.ஏ.ஓ முதல் அரசு அதிகாரிகள் வரை இருப்பதாக தெரிய வருகிறது. பாதிக் கப்பட்ட மாடுகளுக்கு மருத்துவம் செய்ய குளுகோஸ் – ரின்டோஸ் மருந்துகள் கால்நடை மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை என மருத்துவர் கூறுகிறார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அன்றே வட்டாட்சியரிடமும் கோரிக்கைகள் எழுப்பி யுள்ளனர். பாகலூர் ராஜீவ்காந்தி தலித் குடியிருப்பிற்கு அனைத்து அடிப்படை வசதிகளும், வீடுகளுக்கு மின் இணைப்புகளும் உடனடியாக வழங்க வேண் டும், பசுமை வீடுகள் கட்ட உதவி செய்ய வேண்டும், கால்நடை மருத்துவமனையை சீர்படுத்தவேண்டும், பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவிர மருத்துவமும், எல்லப்பா மஞ்சுளா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டும், கொட்டகை, மாடுகளை பெட்ரோல் குண்டு வீசி எரித்தவர் களை கண்டுபிடித்து தண்டிக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இப்பகுதி மக்களை திரட்டி போராட தீர்மானித்துள்ளதாக கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.