புதுதில்லி;
2016-17ஆம் நிதியாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனையில் 63 சதவிகிதம் மின்னணு முறையிலும், கார்டுகள் மூலமும் செலுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக பி.பி.ஐ., கிஃப்ட் கார்டுகள், சமூக நலன் அட்டைகள், வெளிநாட்டுப் பயண அட்டைகள், கார்பரேட் கார்டுகள் மற்றும் மொபைல் வாலட்டுகள் போன்றவற்றின் மூலமான பரிவர்த்தனை 2016-17ஆம் நிதியாண்டில் ரூ. 85 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய நிதியாண்டில் ரூ. 46 ஆயிரம் கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.