புதுதில்லி;
உலக அளவில் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் உட்கொள்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.ஆன்ட்டிபாயட்டிக் மாத்திரைகள் அதிகமாக உட்கொள்வதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஏழு லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை 2030-இல் ஒரு கோடியாக உயரும் எனவும் அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஜலதோஷம் மற்றும் புளூ காய்ச்சல் போன்றவற்றை ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளால் குணப்படுத்த முடியும் என 75 சதவிகிதம் இந்தியர்கள் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றும், 2001-இல் இந்தியர்கள் உட்கொண்ட ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளின் எண்ணிக்கை 800 கோடியாக இருந்த நிலையில், அதுவே 2010-இல் 62 சதவிகிதம் அதிகரித்து 1,290 கோடியை எட்டியிருக்கிறது என்றும் உலகசுகாதார மையம் தெரிவித்துள்ளது.சீனாவில் உட்கொள்ளப்பட்ட ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளின் எண்ணிக்கை 1000 கோடி,அமெரிக்காவில் உட்கொள்ளப்பட்ட ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளின் எண்ணிக்கை 680 கோடி என்றும் உலக சுகாதார மையத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.