இராமேஸ்வரம்;
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் இன்று இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலுக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்திற்கும் வருகை தந்தனர்.பகல் 12 மணிக்கு கோவிலுக்கு சென்றவர்கள் பின்னர் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். முன்னதாக குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் மணிகண்டன், உதயகுமார், மாவட்ட ஆட்சியர் ச.நடராசன் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கோவிலில் அறநிலையத்துறை ஆணையர், கோவில் அறங்காவலர், இணை ஆணையர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: