புதுதில்லி;
தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசியுள்ளார். அப்போது, “ அரசின் நலத் திட்டங்களையும் மானியங்களையும் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது; அதுபோன்று, தேசிய ஊட்டசத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஆதார் இல்லாத குழந்தைகளுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்படும்; அதுவரை, மற்ற அடையாள அட்டையை பயன்படுத்தி அங்கன்வாடி சேவையை பெறலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.