திருவள்ளூர்,
திருத்தணி அருகே சத்துணவு சாப்பிட்ட 4 மாணவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்
திருத்தணி அடுத்த கிருஷ்ணாசமுத்திரம் அரசுப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மாணவர் நவீன், மாணவிகள் காவியா, நந்தினி, கலைச்செல்வி ஆகியோர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். உணவில் புழுக்கள் இருந்ததாக மாணவர்கள் கூறியதால் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: