மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 22,வது மாநாடு பென்னாகரத்தில் தோழர் ஜி.சேகர் நினைவரங்கத்தில் வெள்ளியன்று (டிச.22) தொடங்கியது.
தருமபுரி நகரக்குழு சார்பில் கே.எம்.ஹரிபட் நினைவாக கொடியை மாவட்டசெயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி வழங்க, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பெற்றுக் கொண்டார். தருமபுரி ஒன்றியக்குழு சார்பில் தோழர் என்.முத்து நினைவு ஜோதியை ஒன்றியச் செயலாளர் என். கந்தசாமி வழங்க மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன் பெற்று கொண்டார். பாப்பாரப்பட்டி பகுதிக்குழு சார்பில் தியாகி தோழர் பஞ்சாட்சரம் நினைவு ஜோதியை இடைக்குழு உறுப்பினர் லோகநாதன் வழங்க மாவட்டச் செயலாளர் ஏ.குமார் பெற்றுக்கொண்டார். காரிமங்கலம் வட்டக் குழு சார்பில் தோழர் எம்.பொன்னப்பன் நினைவு ஜோதியை மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன் வழங்க மாவட்டசெயற்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு பெற்றுக் கொண்டார். அரூர் வட்டக்குழு சார்பில் தோழர் எம்.அண்ணாமலை நினைவு ஜோதியை வட்டக்குழு உறுப்பினர் பி.குமார் வழங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. இளம்பரிதி பெற்றுக் கொண்டார். பாலக்கோடு வட்டக்குழு சார்பில் தோழர் எம்.கே.மாதப்பன், பெரமன் நினைவு ஜோதியை சின்னப்பையன் வழங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். இணடூர் பகுதிக்குழு சார்பில் தோழர் மாரியப்பன் நினைவு ஜோதியை எம்.ராஜா வழங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து பெற்றுக் கொண்டார். நல்லம்பள்ளி வட்டக் குழு சார்பில் தோழர் டி.சண்முகம் நினைவு ஜோதியை மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி. மாதேஷ் வழங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ. அர்ச்சுணன் பெற்றுக் கொண்டார்.பென்னாகரம் பகுதிக்குழு சார்பில் தோழர் மாரிமுத்து சகோதரர்கள் நினைவு ஜோதியை ஒன்றியச் செயலாளர் சிவா வழங்க மாவட்டசெயற்குழு உறுப்பினர் வி.மாதன் பெற்றுக் கொண்டார். தோழர் எஸ். காளிமுத்து நினைவு ஜோதியை பி. ஆறுமுகம் வழங்க மாநிலக் குழு உறுப்பினர் எம். மாரிமுத்து பெற்றுக் கொண்டார். தருமபுரி நகரக்குழு சார்பில் தோழர் ஏ.எம்.வேடியப்பன் நினைவு ஜோதியை நகரச் செயலாளர் ஆர். ஜோதிபாசு வழங்க மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் பெற்றுக் கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, சி.நாகராசன் மற்றும் ஏ. ஜெயா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. இளம்பரிதி கொடியேற்றி வைத்தார்.

மாநிலக் குழு உறுப்பினர் எம். மாரிமுத்து அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு செயலாளர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஏ.குமார் வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் வரவு செலவு கணக்குகளை முன்வைத்தார்.முன்னதாக மூத்த தோழர்கள் குழந்தைவேலு, பி.பழனி,பி.ஆறுமுகம், முருகேசன்,கணபதி ஆகியோரை மாநிலசெயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.