ராய்ப்பூர்;
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1,344 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.“2015-ஆம் ஆண்டிலிருந்து 2017 அக்டோபர் 30-ஆம் தேதி வரை மாநிலத்தில் 14 ஆயிரத்து 705 தற்கொலைகள் பதிவாகியுள்ளன; இவற்றில் விவசாயிகள் மட்டும் ஆயிரத்து 344 பேர் தற்கொலை கொண்டுள்ளனர்; குறிப்பாக சுராஜ்பூர் கிராமத்தில் மட்டும் 224 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பலோடாபசார் (210), பலோட் (165), மஹாசமுந்த் (134), பிலாஸ்பூர் (85), பல்ராம்பூர் (70), முங்கெளி (77) மற்றும் கரியாபந்த் (65) உள்ளிட்ட கிராமங்களிலும் அதிகமான விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளது” என்று மாநில உள்துறை அமைச்சர் ராம் சேவாக் பைக்ரா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: