ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்திலிருந்து கடந்த 1965-ஆம் ஆண்டு, அக்டோபர் 2-ஆம் தேதி புதியமாவட்டமாக உதயமானது தருமபுரி மாவட்டம். பெரும்பாலும் வனப் பகுதியும், அதை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகள் அதிக அளவு உள்ளடக்கியது இம்மாவட்டம். விவசாயம் தவிர வேறெந்த தொழில் வளம் இல்லாத பகுதி இது. இங்கு பெரும்பாலும் மேட்டு நிலங்களும், பாசன வசதி இல்லாத நிலங்களுமே அதிக அளவில் உள்ளன.

இதன்காரணமாக பொன்விழா ஆண்டில் கல்வி, பொருளாதாரம், மனிதவள மேம்பாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகவே தொடர்கிறது தருமபுரி.விவசாயம் சார்ந்த இம்மாவட்டத்தில் பெருமளவு சிறுதானிய பயிர்கள் சாகுபடிசெய்யப்படுகிறன்றனர். போதிய மழை இல்லாத தால் தற்போது விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளது. ஒரு பகுதியினர் விவசாயத்தின் உபதொழிலாக பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். வோளண் நெருக்கடி காரணமாக ஏழை சிறு-குறு விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் வேலைத் தேடி குடிபெயரும் நிலை தொடர்ந்து வருகிறது.

இந்த மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க தொழில் வளம் ஏதுமில்லா ததால், குழந்தைகளை தனியே விட்டுவிட்டு பெற்றோர் மட்டும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளின் கல்விபாதிக்கப்படுவ துடன், இளம் வயதுதிருமணங்களும் அதிகளவில் நடைபெறு கிறது.பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் நிலவி வருகிறது.தருமபுரி மாவட்டத்தில் குடும்பம், குடும்பமாக குடிபெயர்ந்து வருவதைத் தவிர்த்து, இதே பகுதியில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தன்னார்வ அமைப்புகளும், நீண்ட காலமாக போராடி வந்தன.

இதன் விளைவாக தமிழக அரசுதருமபுரியில் சிப்காட்டும், பென்னாகரம் , அரூரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. தொழிற்பேட்டை அமைப்பதற்கான எந்த முயற்ச்சியும் அரசுமேற்கொள்ளவில்லை உள்ளூர்தொழில்களை மேம்படத்த திட்டமிடவும் எந்த முன்முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

உதாரணத்துக்கு தொழிற்பேட்டைக்கு தேவையான மின்சாரம், மற்றும் தருமபுரி மொரப்பூர் ரயில்பாதை உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை.தருமபுரியில் கடந்த 2008 ல்அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரிமருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தருமபுயில் இயங்கி வந்த அரசு மாவட்ட மருத்துவமனை பென்னாகரத்துக்கு மாற்றப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் இதயம், நரம்பியல், மூளை சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் தொடங்கவில்லை.பென்னாகரத்தில் உள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவ மனையில் போதிய அளவு மருத்துவர்கள் ஊழியர்கள் இல்லை. அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி மருத்துவர்கள் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

உள்ளூர் தொழில்களை மேம்படுத்த திட்டமிடவும் எந்த முன்முயற்சிகளை யும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. அதுமட்டும் அல்லாமல் பெண்கொடுமை, வன்கொடுமைக்கு எதிராகவும், இலவச வீட்டு மனைப்பட்டா, விவசாயிகள், முறைசாரதொழிலாளர்களின் கோரிக்கைக்காகவும், தலித் மக்கள் சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகவும், மலைவாழ் மக்களின் வாழ்வாதரத்துக்கும் சிறுபான்மை மக்கள் நலனுக்காகவும், தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் காகவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரியில் கோரிக்கை மாநாடுகளை நடத்தியது. தருமபுரி மாவட்ட மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கட்சியாகும். இக் கட்சியின் தருமபுரி மாவட்ட 22 வது மாநாடு டிசம்பர் 21,22,23, ஆகிய தேதிகளில் பென்காரத்தில் நடைபெறுகிறது. 21 ஆம் தேதி தோழர் தேவ.பேரின்பன் நினைவு திடலில் பொதுக் கூட்டமும், முன்னதாக பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து செம்படை பேரணி துவங்கும் பின்னர் டிசம்பர் 22,23 தேதிகளில் பென்னாகரம் காரல் மார்க்ஸ் திருமணமண்டபத்தில் தோழர் ஜி.சேகர் நினைவரங்கத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

  • – ஜி.லெனின்

Leave a Reply

You must be logged in to post a comment.