கரூர்: கரூரில் இடிந்துவிழும் நிலையில் காணப்படும் குடிசை மாற்றுவாரியம் கட்டிடத்தால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் காளியப்பகவுண்டனூர் என்ற பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 112 வீடுகள் அமைந்துள்ளன. இதில் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல் காணப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக குடிசை மாற்று வாரியத்திடம் புகார் அளித்தாக கூறப்படுகின்றது. இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் விரிசல்கள் ஏற்பட்ட இடங்களில் சிமென்ட் பூசப்பட்டு கட்டிடம் மோசமான நிலையில் காணப்படுகின்றது. கட்டிடத்தின் மோசமான நிலையால் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.