மும்பை;
குளுக்கோஸ், மரி மற்றும் மில்க் பிஸ்கெட் விலைகளை,புத்தாண்டு முதல் 5 சதவிகிதம் வரையில் உயர்த்தப் போவதாக பார்லே புராடெக்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.“ஜனவரி – மார்ச் மாதங்களில் கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட பிஸ்கெட்களின் விலை 4 முதல் 5 சதவிகிதம் வரையில் உயர்த்தப்படும்; இதன்படி, குளுக்கோஸ், மரி மற்றும் மில்க் ஆகிய பிஸ்கெட்களின் விலை உயரும்” என்று பார்லே புராடெக்ட்ஸ் நிறுவனத் தலைவர் மாயன்க் ஷா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பிஸ்கெட்களுக்கு 18 சதவிகித வரி விகிதத்தை நிர்ணயித்தபோதும், நான்கு மாதங்களாக பிஸ்கெட்டுகளின் விலையை பார்லே நிறுவனம் உயர்த்தாமலேயே இருந்து வந்ததாகவும், ஆனால், புத்தாண்டு முதல் இவற்றின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பு பிஸ்கெட்களுக்கு 9 முதல் 10 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: