தீக்கதிர்

சிறுநீரக மருத்துவ பரிசோதனை முகாம்

சென்னை சைதாப்பேட்டை குயவர் தெருவில் உள்ள ஆர்.ஜி. ஸ்டோன் யூராலஜி அண்ட் லேப்பரஸ்கோபி மருத்துவமனை, ஜனவரி 15ம் தேதி வரை முதியவர்களுக்கான இலவச சிறுநீரக மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்துகிறது.

இந்த இலவச முகாம்கள் அனைத்து வார நாட்களிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மருத்துவமனையில் நடைபெறும். இதில் பங்குபெறுபவர்கள் சுமார் ரூ. 4ஆயிரம் மதிப்புடைய சிறுநீரக பரிசோதனைகளை வெறும் ரூ. 200 பதிவுக் கட்டணம் செலுத்துவதன் மூலம் அடையலாம் என்று மருத்துவமனையின் மூத்த சிறுநீரக மருத்துவர் மு.அருண்குமார் கூறியுள்ளார்.

குளிர்காலங்களில் வியர்வையின்மையாலும், சுவாசிக்கும் போது ஏற்படுகிற நீராவி இழப்பாலும், உடலில் உருவாகும் கழிவுநீர் சிறுநீரகத்தில் கலப்பதால், சிறுநீர் வெளியேறுதல் அதிகரிக்கிறது. நாளொன்றுக்கு 6 முதல் 8 முறையும், இரவில் இருமுறைக்கு மேலாக சிறுநீர் கழிக்கவேண்டிய நிலையில் உள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பல்வேறு மருத்துவமுறைகளில் தீர்வு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.