திருப்பூர்,

திருப்பூர் உடுமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முருகன் என்பவரது மகன் கலப்புத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சாதிய ஆதிக்க சக்தியினர் முருகனின் குடும்பதை ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த முருகன் அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: