சிம்லா;
இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை தொடர்ந்து அம்மாநில முதல்வர் வீரபத்திர சிங் பதவி விலகியுள்ளார்.மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை இன்று நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வீரபத்திர சிங் அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை, பொறுப்பு முதல்வராக பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ராம்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த வீரபத்திர சிங் (83), அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 8 முறை வென்றுள்ளார். அம்மாநிலத்தில் 4 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். நீண்டகாலமாக சிம்லா புறநகர் தொகுதியில் நின்று வெற்றிபெற்று வந்த வீர்பத்திர சிங் இந்த முறை, தனது மகன் விக்ரமாதித்ய சிங் போட்டியிட வசதியாக அந்த தொகுதியை விட்டுக்கொடுத்தார். இந்தத் தேர்தலில் அர்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Leave A Reply

%d bloggers like this: