திருப்பூர், டிச.18-
திருப்பூர் அம்மாபாளையம் அருகில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 வகுப்பு படிக்கும் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அம்மாபாளையம் கோபால்டு மில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி ஜெயசித்ரா. இவர்கள் தையல் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் பூமிகா, அம்மாபாளையம் அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழனன்று பள்ளி முடித்து வந்த பூமிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பூமிகாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமிக்கு டெங்கு அறிகுறி இருந்ததால் ரத்த பரிசோதனை செய்யுமாறு பெற்றோரிடம் கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் சிறுமிக்கு காய்ச்சல் அதிகமானதை கடந்த 16-ந்தேதி இரவு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுகிழமை மாலை சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சிறுமி திங்களன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: