கடலூர்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராக டி. ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது கடலூர் மாவட்ட மாநாடு விருத்தா சலத்தில் டிசம்பர் 16 முதல் 18 வரை நடைபெற்றது. மூத்த தலைவர் ஜி.கலியபெருமாள் கொடி ஏற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.மாதவன் அஞ்சலி தீர்மான த்தை முன்மொழிந்தார்.

வரவேற்புக்குழுத் தலைவர் வழக்குரைஞர் ஏ.சந்திர சேகரன் வரவேற்றார்.
மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வேலை அறிக்கை யை சமர்ப்பித்து பேசினார். வரவு செலவு அறிக்கையை செயற்குழு உறுப்பினர் எம்.மருதவாணன் சமர்ப்பித்தார்.

மாநாட்டை வாழ்த்தி மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து
மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன் பேசினார். வட்டச் செயலாளர் என்.எஸ்.
அசோகன் நன்றி கூறினார்.மூத்த தோழர்கள் எஸ்.துரைராஜ், வி.முத்துவேல், ஜி.குப்புசாமி ஆகியோரை மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கவுரவித்தார்.

மாநாட்டில், மாவட்டச் செயலாளராக டி. ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக மூசா, வி.உதயகுமார், ஜி.மாதவன், எம்.மருதவாணன், பி.
கருப்பையன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, வி.சுப்புராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திரு அரசு, என்.எஸ். அசோகன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி ஆகியோரும் மாவட்டக்குழு உறுப்பினர்
களாக பி.கற்பனைச் செல்வம், எஸ்.தட்சிணா மூர்த்தி, எம்.மீனாட்சிநாதன், எஸ்.காமராஜ், ஆர்.தமிழரசன், ஆர்.ஆளவந்தார், வி.மேரி, ஆர்.சிவகாமி, எஸ்.பிரகாஷ். ஜே.ராஜேஷ் கண்ணன், ஏ.வேல்முரு கன், எஸ்.எஸ்.ராஜ், ஜி.பாஸ் கரன், எம்.பி.தண்டபாணி, பி.வாஞ்சிநாதன், எஸ்.முத்துகுமாரசாமி, ஆர்.அமர்நாத், டி. ஜெயராமன், டி.பழனிவேல், எஸ்.ராஜா, எம்.முத்துகுமரன், டி.கிருஷ்ணன், என். ஜெயசீலன், கே.சுனில்குமார், கே.தனபால், ஆர்.பால முருகன், பி.முத்துலட்சுமி, ஆர்.உத்திராபதி ஆகி யோர் உட்பட 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: