அகமதாபாத்,
குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சி உள்ளது. கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் 2 கட்டங்களாக இங்கு தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில்,இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதற்காக குஜராத்தின் 33 மாவட்டங்களில் மொத்தம் 37 வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குஜராத்தைப் பொறுத்த வரையில் கடந்த 22 ஆண்டுகளாக உள்ள ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. பிரச்சாரத்தை பிரதமர் மோடியே தலைமையேற்று நடத்தினார்.
காங்கிரஸ் கட்சியும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க பல வியூகங்களை வகுத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரச்சாரம் தீவிரமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காலை 10 மணி நிலவரப்படி குஜராத்தில் பாஜக 107 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 73 இடங்களிலும் மற்றவை 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

இமாச்சல் பிரதேசம்
இமாச்சலை பொறுத்தவரை  39 இடங்களில் பா.ஜ.க.வும் 23 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகின்றது.

10.30 மணி நிலவரம்

குஜராத் முன்னிலை வெற்றி
காங்கிரஸ் 72 1
பாஜக 97 9
மற்றவை 3 0

 

இமாச்சல் பிரதேசம் முன்னிலை வெற்றி
காங்கிரஸ் 21 1
பாஜக 38 3
மற்றவை 4 1

 

11.30 AM நிலவரப்படி

குஜராத் முன்னிலை வெற்றி
காங்கிரஸ் 73 1
பாஜக 96 9
மற்றவை 3 0

 

இமாச்சல் பிரதேசம் முன்னிலை வெற்றி
காங்கிரஸ் 21 1
பாஜக 38 3
மற்றவை 4 1

 

 

Leave a Reply

You must be logged in to post a comment.