ஈரோடு, டிச.18-
ஈரோட்டில் சிபிஎம் மூத்த தோழர் ஏ.எம்.காதர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டத்தின் மூத்த தோழர் ஏ.எம்.காதரின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடம்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அவரது திருவுருவப் படத்திற்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்விற்கு சிபிஎம் மலைவட்டார செயலாளர் சி.துரைசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.சடையலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சடையப்பன், மலைவாழ் மக்கள் சங்க மலைவட்டார செயலாளர் ராசப்பன், கமிட்டி உறுப்பினர் பி.ராஜ்குமார் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குன்றி, திங்களூர் வைத்தியநாதபுரம், மோசலைமடுவு ஆகிய பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மலை வட்டார கமிட்டி உறுப்பினர் பி.தங்கவேல் தலைமையில் பெரியசாலட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: