சிம்லா,

இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் ராகேஷ் சின்கா வெற்றி பெற்றுள்ளார்.
இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது.
இமாச்சல் பிரதேசத்தில் முதல்வர் வீர்பத்ர சிங், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் உட்பட பலர் மீண்டும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸும் பாஜக.வும் 68 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இமாச்சலில் 68 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தற்போது 42 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நியோக் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராகேஷ் சின்கா  வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.