இமாச்சல் மொத்த இடங்கள்;       68

கட்சிகள் பெற்ற இடங்கள்;          
——————————————–
பாஜக                                                        44
காங்கிரஸ்                                               21
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி         1
சுயேச்சைகள்                                            2

மொத்தம்                                                  68

இமாசலப்பிரதேசத்தில் எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இங்கு மொத்தமுள்ள 68 இடங்களில் 44 இடங்களைப் பிடித்து, பாஜக வெற்றிபெற்றுள்ளது. காங்கிரசுக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓரிடத்தை வென்றுள்ளது. சுயேச்சைகள் 2 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இங்கு 10 ஆண்டுகளுக்குப் பின் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

வாக்கு சதவிகிதம்                                                                                                                                                                   குஜராத் தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி பாஜக 48.9 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 42.3 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தன. இவற்றில் கூட்டணிக் கட்சி மற்றும் ஆதரவு சுயேச்சைகளின் வாக்குகளை சேர்த்தால், காங்கிரசின் வாக்கு 45 சதவிதத்தை எட்டும். குஜராத் தேர்தலில் கடந்த 2012-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 47.85 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 38.93 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இமாசல பிரதேசத்தைப் பொறுத்தவரை தற்போது நடந்த தேர்தலில் பாஜக 49.5 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 42.7 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம் 53 ஆயிரத்து 503 வாக்குகளுடன் 1.5 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.