ராமேஸ்வரம்,

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகளும், ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளது.

இது குறித்து மீனவர் சங்க தலைவர்கள் கூறும்போது, அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. அரசியல்வாதிகள் அவ்வப்போது குரல் கொடுப்பதால் எந்த பயனும் இல்லை. எங்கள் நிலை குறித்து வருகிற 23 ஆம் தேதி ராமேஸ்வரம் வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: