போபால்,

போபாலில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் பைராகர்ஹில் நகர் அருகே
உள்ள தனியார் வணிக வளாகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் 100-க்கும் மேற்பட்ட கடைகளின் தீ பற்றியது. சுமார் 5 மணி நேரமாக தீயை அணைக்க  தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தற்போது வரை இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழப்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. வணிக வளாக கட்டடத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டிருப்பதாலும், வெப்பம் காரணமாக கடைகளில் உள்ள கண்ணாடிகள் வெடித்து சிதறுவதால் வணிக வளாகம் அமைந்துள்ள பகுதி அபாயகரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: