அய்சால்,

மிசோரத்தில் ரூ.1302 கோடி மதிப்பிலான துய்ரியல் நீர் மின் திட்டத்தை பிரதமர் மோடி  துவக்கி வைத்தார்.

மிசோரம் மாநிலத்தில் உள்ள துய்ரியல் அணையில் 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், நீர் மின் திட்டத்திற்கு கடந்த 1998ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 30 சதவீத பணிகள் முடிந்திருந்த நிலையில், பொதுமக்கள் போராட்டம் காரணமாக, நீர்மின் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகளை அடுத்து, கடந்த 2011 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கி, தற்போது நிறைவுபெற்றுள்ளது. ரூ.1302 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.

முன்னதாக மிசோரம் தலைநகர் அய்சாலில் பொதுமக்களிடம் பேசிய பிரதமர் மோடி, வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மிசோரம் மக்கள் தங்கள் பிரச்சனையை தில்லிக்கு அனுப்ப தேவையில்லை. வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் பிரதிநிதிகள் மிசோரத்திற்கே வருவார்கள் என கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.