===கண்ணன் ஜீவா===                                                                                                                                                                         ஆஷஸ் தொடர் ஒரு பனிப் போர் என்றால், அதற்கு உள்ளே நடக்கும் மினிப் போர்தான் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி. பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் மெல்பர்ன் மைதானத்தில் டிசம்பர் 26 முதல் 30 வரை நடைபெறும் இந்தப் போட்டியின் வெற்றி, தோல்வி இரண்டும் ஆஸ்திரேலியா அணியின் கவுரவத்துடன் தொடர்புடையது.

வரலாறு
பாரம்பரியமான ஷெபீல்டு ஷீல்டு போட்டி விக்டோரியா அணிக்கும், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றுவந்தது. இந்த போட்டியின் போது கிறிஸ்துமஸ் தினம் வந்த காரணத்தால் நியூ சவூத் வேல்ஸ் அணி வீரர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இழக்க வேண்டி இருந்தது. இதனால் டெஸ்ட் போட்டிகள் ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டன. 1950-51ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் மெல்பர்ன் மைதானத்தில் டிச. 22 முதல் 27 வரை ஒரு போட்டி நடைபெற்றது. இதனால் 4 ஆது நாள் பாக்சிங் டேவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்பிறகு 1953 முதல் 1967 வரை பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை. 1980 ஆண்டு முதல் மாடர்ன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் தொடங்கிய பின்பு டிச. 26 ஆம் தேதி முதல் 30 வரை மெல்பர்ன் மைதானம் கவுஸ் புல்தான்.

அசத்தல் ஆஸி.
இதுவரை 41 பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் ஆஸ்திரேலியா அணி 24 போட்டிகளில் வெற்றியும்,8 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. 9 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.இதில் 1968, 2006, 2012, 2016 உள்ளிட்ட ஆண்டுகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 1999 ஆம் ஆண்டு முதல் 2007 வரை தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளும், 1990 முதல் 1995 வரை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளும் தோல்வியே சந்திக்காமல் அசத்திவந்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

இங்கி. சோகம்
ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இதுவரை 11 பாக்சிங் டே டெஸ்ட் போட்டி
களில் விளையாடியுள்ளன. இதில் ஆஸ் திரேலியா 6 முறையும், இங்கிலாந்து 4 முறை
யும் வெற்றிப் பெற்றுள்ளன. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது.இதற்கு அடுத்த படியாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 9 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 6 முறையும், மேற்கிந்திய தீவுகள் இரண்டு முறையும், ஒரு போட்டி டிராவிலும் முடிந் துள்ளது. 

வெற்றி இல்லை
இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் 7 பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இந்திய அணி, 5 தோல்விகளையும், 2 டிராக்களையும் கண்டுள்ளது.கடைசியாக 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாக்சிங் டே அன்று போட்டியின் போது டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். 2018 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்த்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் ரசிகர்கள்
பாக்சிங் டே அன்று மட்டும் அந்தப் போட்டியை காண சராசரியாக 40 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியை பாக்சிங் டே 91 ஆயிரத்து 112 பேர் நேரில் கண்டுகளித்துள்ளனர். குறைந்தபட்சமாக 1984 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியை 15 ஆயிரத்து 504 பேர் பார்த்துள்ளனர்.

ஒருநாள்
ஆஸ்திரேலியாவை தவிர்த்து நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் பாக்சிங் டே அன்று போட்டிகள் நடைபெறுகின்றன. நியூசிலாந்தில் முதல் முதலாக வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர் என்ற இடத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்பட்டன.இதன்பிறகு 2013 ஆம் ஆண்டு முதல் மீண்டும் பேசின் ரிசர்வ் இடத்தில் டெஸ்ட் போட்டிகளாக நடத்தப்பட்டு வருகின்றன. தென் ஆப்பிரிக்காவில் டர்பனில் உள்ள சஹாரா மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. ஆஸ் திரேலியாவில் 1989 ஆம் ஆண்டு மட்டும் பாக்சிங் டே போட்டி ஒரு நாள் போட்டியாக நடைபெற்றது. இதில் இலங்கை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. 

அடுத்த வாரம் நடைபெறும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. கடைசியாக இவ்விரு அணிகளும் 2013 ஆம் ஆண்டில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: