காந்திநகர்,

குஜராத்தில் ஆறு மையங்களில் பதிவான வாக்குகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அந்த மையங்களுக்கு டிசம்பர் 17 ஆம் தேதியன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற  வாட்கம், வீரம்கம், டஸ்கிரோ மற்றும் சவ்லி ஆகிய இடங்களில் உள்ள 6 வாக்குப் பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் அழிக்க அதிகாரிகள் மறந்துவிட்டனர். இதையடுத்து இந்த மையங்களின் பதிவாக வாக்குகள் ரத்து செய்யப்பட்டு , இந்த 6 மையங்களிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி அந்த 6 மையங்களுக்கும் டிசம்பர் 17 ஆம் தேதியன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.