வாஷிங்டன்,

எச்பி1 விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் உத்தரவை திரும்ப பெற அமெரிக்க உள்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் எச்பி1 விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி எச்-4 விசா மூலமாக அமெரிக்காவில் பணியாற்ற ஓபாமா நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி 2016 ஆம் ஆண்டில் எச்-4 விசா வைத்திருப்பவர்களில் 41,000-க்கும் மேற்பட்டவர்களுக்கும், 2017 ஜூன் மாதம் வரை 36,000-க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணி அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் , எச்பி1 விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் உத்தரவை திரும்ப பெற அமெரிக்க உள்துறை முடிவு செய்துள்ளது. மேலும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்ற அதிபர் டிரம்பின் கொள்கைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இதனால் எச்1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வேலையில்லாமல் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். அவர்கள், இதனால் திறமையானவர்களை அமெரிக்கா இழக்க நேரிடும். எச்1பி விசாவில் மேலும் விதிகளை மாற்றவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: