ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுத்தால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் சேதம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக பான்யுமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 70 பேர் தற்காலிகமாக ஏற்பட்டுத்தப்பட்ட குடில்களுக்கு இடம் மாற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

 

Leave A Reply

%d bloggers like this: